AIADMK MLAs met Nirmala Sitharaman

Advertisment

அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த அது கூட்டணி முறிவு வரை சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்துஅதிமுக - பாஜக கூட்டணி பிரிந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்து வருகிறது. அதேநேரம் அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு மேற்கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் அமுல் கந்தசாமி, வரதராஜ், ஜெயராமன், செல்வராஜ் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர். நேற்று அண்ணாமலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கம் குறித்து அறிக்கை ஒன்றை பாஜக தலைமைக்கு நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அவரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.