ADVERTISEMENT

ராகுலின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு!

08:47 AM Apr 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

எம்.பி பதவி நீக்கத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட இலவச டெலிஃபோன் மற்றும் இணையதள இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT