ADVERTISEMENT

தோழியை விமானி அறையில் அனுமதித்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு அபராதம்

01:11 PM May 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக இருந்த ஒருவர் தனது பெண் தோழியை விமான பைலட்டின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது குறித்த புகார் ஒன்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இருப்பினும் இந்த சம்பவம் நடந்த அன்று அந்த பெண் விமானத்தில் பயணியாக சென்றது தெரியவந்தது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்த விமானியின் இந்த செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. விமானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது விமான ஓட்டுநர் உரிமமும் 3 மூன்று மாதக் காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது விமானியின் இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT