ADVERTISEMENT

புதுச்சேரி இந்தியாவோடு முறைப்படி இணைந்த நாள்...அரசு சார்பில் நினைவிடத்தில் மரியாதை!

10:55 PM Aug 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்து இந்தியாவுடன் புதுச்சேரி இணைய சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் கீழூரில் நடைபெற்றது.

ADVERTISEMENT

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம், கடந்த 1954- ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி விடுதலை பெற்றது. இருப்பினும் 1962- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- ஆம் தேதி தான் புதுச்சேரி இந்தியாவோடு முறைப்படி இணைந்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த நாளை கொண்டாடும் வகையில், புதுச்சேரி இந்தியாவோடு இணைப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடமான கீழூரில் புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 16- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (16/08/2022) புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள நினைவிடத்தில் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தியாகிகள் கெளரவிக்கப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT