புதுச்சேரி கரிக்கன் நகரை சேர்ந்த ஜெயமூர்த்தி காவலில் மரணம் அடைந்த வழக்கில், பாகூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் காவல்துறையில் சரணடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த 17.09.2019 அன்று சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் டாக்டர் வெங்கட்ட ரமண நாயக் ஆகியோரின் முன்பிணை (Anticipatory Bail) மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும், இவ்வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத புதுச்சேரி அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, அதனைப் பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு (ஜெயமூர்த்தியின் மனைவி) அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் சரணடைந்துள்ளார். அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின் அவர் காலாப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஏற்கனவே சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் சரணடைந்து காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.