ADVERTISEMENT

‘நிர்வாணம் எல்லா நேரத்திலும் ஆபாசம் இல்லை’ - ரெஹானா பாத்திமாவை விடுவித்த நீதிமன்றம்

07:47 PM Jun 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நிர்வாணத்தை எல்லா நேரத்திலும் ஆபாசமாக எடுத்துக் கொள்ள முடியாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ரெஹானா பாத்திமா என்பவர் 'உடலின் கலை மற்றும் அரசியல்' என்ற தலைப்பில் கடந்த 2020-ல் தன்னுடைய அரை நிர்வாண உடலில் மகன் மற்றும் மகள் ஓவியம் வரையும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். குழந்தைகளை வைத்து அவரது உடலில் நிர்வாண உடலில் ஓவியங்கள் வரைந்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சமூக ஆர்வலரான ரெஹானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் இச்செயலில் குற்றம் காண முடியாது என அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. ரெஹானா பாத்திமாவின் செயல் எந்த விதத்திலும் பாலியல் நோக்கம் அற்றது; அநாகரீகம் அற்றது என தெரிவித்த நீதிமன்றம், அவர் தனது உண்மையான உணர்வுகளை கலை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலாடை இல்லாத உடலை எந்த நேரத்திலும் ஆபாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்து அவரை வழக்கிலிருந்து விலக்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT