ADVERTISEMENT

"கனவுல கூட நினைத்துப் பாக்கல!" - பஞ்சாயத்துத் தலைவரான தூய்மைப் பணியாளர் உருக்கம்!

05:22 PM Dec 31, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளின் கூட்டணியான 'எல்.டி.எஃப்.' பல அதியங்களை நிகழ்த்திவருகிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள, பத்னாபுரம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிஷன் ஆபீஸ் என்று சொல்லப்படுகிற ஊராட்சி அலுவலகத்தில், கடந்த பத்து வருடமாகத் துப்புரவு வேலை செய்துவருபவர் ஆனந்தவல்லி என்கிற நடுத்தர வயதுப் பெண்.

அடிப்படையில் பட்டியலினச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணான ஆனந்தவல்லி, அந்த ப்ளாக் அலுவலத்தில் தினக்கூலி அடிப்படையில் காலை, மாலை கூட்டிப் பெருக்கி துப்புரவுசெய்து, பின்பு அங்குள்ள வீடுகளிலும் பாத்திரங்கள் துலக்கிப் பிழைப்பு நடத்திவந்துள்ளார். கணவர் மோகனன் சி.பி.எம்.-ன் ஊராட்சிச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பெயிண்ட்டிங் வேலையும் செய்துவருகிறார்.

ஆரம்பக் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஆனந்தவல்லியை சி.பி.எம். இம்முறை பத்னாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் தனது கேண்டிடேட்டாக நிறுத்தியது. மேல்தட்டு நடுத்தர வர்க்கம் என்று கலவையான ஜனத்தொகையைக் கொண்ட அந்தப் பொது வேட்பாளர்களுக்கான ஊராட்சியில், சேலஞ்சாக ஆனந்தவல்லியை சி.பி.எம். களமிறக்க, இதனை மிகச் சாதாரனமாக எடுத்துக் கொண்டனர் எதிர் வேட்பாளர்களான காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேட்சைகள்.

நான்கு முனைப் போட்டியில் கொதிநிலையில் களமிருந்தது. இறுதியில் மற்ற வேட்பாளர்களைவிட 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ஆனந்தவல்லி. அடுத்த அதிசயமாக எந்தப் ப்ளாக் ஆஃபீஸில் ஆனந்தவல்லி பத்துவருடமாகக் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கினாரோ, அதே பத்னாபுரம் ஊராட்சியில், அவரைத் தலைவராக மாற்றிவிட்டனர் இடது சாரிகள்.

ப்ளாக் ஆபீஸை சுத்தப்படுத்திய ஆனந்தவல்லி, தற்போது ஊராட்சியையே சுத்தப்படுத்தக் கிளம்பியிருக்கிறார். “நான் கனவில கூட இந்த மாதிரி நடக்கும்னு நினைச்சுபாக்கல. தினமும் ஆஃபீஸ்ல நடக்குறதுப் பாத்திருக்கேன். பார்ட்டி தந்த வேலய நிச்சயம் நல்லபடியாச் செய்வேன்” என்கிறார் ஆனந்தவல்லி.

21 வயது கல்லூரி மாணவியான ஆரியா ராஜேந்திரன் சி.பி.எம்.மின் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர். அடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, பொதுத் தொகுதியில் நிற்கவைத்து அதன் தலைவராகவும் மாற்றியதோடு கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் எந்த மூலையிலும் துப்புரவுத் தொழிலாளி பெண் ஒருவர் அதே அலுவலகத்தின் தலைவராக மாறியதாக, வரலாறில்லை என்கிறார்கள் அக்கட்சியினர்.

இதனால்தான், கேரளா கடவுளின் தேசமோ...!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT