corona

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் கரோனாபரவல் அதிகமாகஇருந்து வருகிறது. மேலும் கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகும்40 ஆயிரம் பேருக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அண்மையில் கேரளாவிற்குச் சென்ற மத்தியக் குழுவும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் அதிகமான பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் கூறியிருந்தது. இந்தநிலையில் இன்று மட்டும் கேரளாவில்24,296 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் கரோனா உறுதியாகும் சதவீதம் 18.04 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் அண்மையில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.