ADVERTISEMENT

மதிய உணவில் பச்சோந்தி; பாதிப்புக்குள்ளான குழந்தைகள்!

11:25 AM Sep 13, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகார் மாநிலம் சிதாமர்ஹியில் உள்ள ஆரம்ப பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு வயிற்று வலி மற்றும் வாந்தியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தைப் போலவே பீகார் மாநிலத்திலும் மதிய உணவுத் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டமானது அரசுப் பள்ளியில் படிக்கும் 1ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நேற்று (12-09-23) குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 50 குழந்தைகள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டனர். இதை அறிந்த பள்ளி நிர்வாகம், அந்த குழந்தைகளை உடனடியாக அங்கு இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர். ஒரே நேரத்தில், மதிய உணவை சாப்பிட்ட 50 மாணவர்கள் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மருத்துவர் சுஜாதா, ”மதிய உணவில் பச்சோந்தி காணப்பட்டதாக குழந்தைகள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அதே உணவையும் உட்கொண்டுள்ளனர். இங்குள்ள அனைத்து குழந்தைகளும் சீராக இருக்கின்றனர். மேலும், அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளோம். தற்போது இந்த நிலைமை சகஜ நிலைக்கு வந்துள்ளது. அந்த குழந்தைகளோடு அவர்களுடைய பெற்றோரும் மருத்துவமனையில் இருக்கின்றனர். இதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT