மூளைக்காய்ச்சல் காரணமாக 49 குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரிழந்த சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Central team in Muzaffarpur as acute encephalitis syndrome toll rises to 48

மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 4 மாதங்களாக மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு சிகிச்சை நடந்து வந்த நிலையில் தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 49 பேர் குழந்தைகள்.

முசாபார்பூரின் கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 49 பெரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 8 பெரும் மூளைகாய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகார் மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. 57 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என கணிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என்பதால் நாடு முழுவதும் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.