ADVERTISEMENT

அரசு இல்லத்தை காலி செய்தார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே! 

07:39 PM Jun 23, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து 48 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாமில் முகாமிட்டுள்ளனர். இதனால் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாதி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (23/06/2022) மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், "ஆளும் கூட்டணியில் இருந்து தங்கள் கட்சி விலகவும் தயார்; ஆனால் அசாமில் உள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ஏக்நாத் ஷிண்டேவை நேரில் சந்தித்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் எனக் கூறியிருந்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, 'வர்ஷா' என்றழைக்கப்படும் முதலமைச்சரின் அரசு இல்லத்தைக் காலி செய்து தனது சொந்த இல்லத்திற்கு சென்றார். இதனால் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT