ADVERTISEMENT

"சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம்"- முதலமைச்சர் நாராயணசாமி கருத்து!

06:31 PM Feb 02, 2020 | kalaimohan

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறவும், NRC க்கு வழிகோளும் NPR தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், மக்கள் அனைவரது எதிர்வினை சிந்தனைகளையும் ஒருமைப்படுத்தும் விதமாக புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT


இன்று காலை ராஜா தியேட்டர் சிக்னல் அர தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தை புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ தலைமையில் முதலமைச்சர் வே.நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "

ADVERTISEMENT

மத்திய அரசு குடியுரிமைச சட்ட திருத்த மசோதா அமல்படுத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகன்றன. இது மக்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கின்ற ஒரு சட்டமாகும். இந்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலமாக மக்களைப் பிரித்து இந்த நாட்டில் இந்துராஷ்டிரா என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற பாரதிய ஜனதா முயற்சிக்கிறது. அது பலிக்காது. புதுவை மாநிலத்திலும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்காக புதுச்சேரி அரசு வருகிற 12–ஆம் தேதி சிறப்பு சட்டமன்றத்தை கூட்டியுள்ளது.

அப்போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், இச்சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் மத்திய மோடி தலைமையிலான அரசு எங்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர்கொள்வோம்" என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க தலைவர் அபிஷேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் பொறுப்புக்குழு உறுப்பினர் செல்வராசு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மனித நேய மக்கள் கட்சி செயலாளர் பஷீர்அகமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் ஜிகினி, மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

இன்று தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் தொடர்ந்து வருகிற 8–ஆம் தேதி வரை புதுச்சேரி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT