ADVERTISEMENT

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

02:57 PM Oct 09, 2019 | santhoshb@nakk…

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஸா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றன.

ADVERTISEMENT


இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவித்தார். அதன் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு. அகவிலைப்படி உயர்வின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்கு வந்த 5,300 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான நல உதவி பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவில் நவம்பர் 30- ஆம் தேதி வரை சலுகை. நலஉதவி பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை நவம்பர் 30- ஆம் தேதி வரை தளர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.

ADVERTISEMENT




Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT