park

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கில் 5- ஆம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, "நாடு முழுவதும் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் திறக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள உணவு கூடங்களில் 50% பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்ட, 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி தரக்கூடாது. பொழுதுபோக்கு பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது. பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment