Skip to main content

அம்பானிக்கு கைமாறும் மத்திய அரசின் அசோகா ஹோட்டல்

Published on 24/11/2022 | Edited on 25/11/2022

 - தெ.சு.கவுதமன்

 

Central government's Ashoka Hotel to be handed over to Ambani

 

பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள, டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான அசோக் ஹோட்டல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலின் விற்பனை விலையாக ரூ.7,409 கோடி ரூபாயை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் மட்டுமின்றி, இந்திய சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மேலும் 7 ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், டெல்லியின் மையப்பகுதியில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டுவதற்கான திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

டெல்லியில் ஒரு 5 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலை வாங்க வேண்டுமென்ற ஆசை முகேஷ் அம்பானிக்கு பல காலமாக இருந்திருக்கிறது. இவர் சமீபத்தில் முதலீடு செய்த ஓபராய் குழுமத்தின் ஹோட்டலை முழுமையாக இவரால் கையகப்படுத்த முடியவில்லை. இச்சூழலில், டெல்லியில் விற்பனை செய்யப்படவுள்ள அசோக் ஹோட்டலை முகேஷ் அம்பானியே வாங்குவாரென்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. வாஜ்பாய் காலத்திலேயே இந்த ஹோட்டல் விற்பனைக்கு வருவதாக இருந்த சூழலில், அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரான ஜக்மோகன், 'எந்த ஒரு லாபம் ஈட்டும் அரசு நிறுவனத்தையும் விற்க மாட்டோம்' என்ற வாஜ்பாய் அரசின் கொள்கை முடிவைக் காரணம் காட்டி விற்பனையைத் தடுத்துவிட்டார்.

 

பிரதமர் மோடியின் ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங்களை விற்று காசாக்குவதிலும் 99 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு விட்டு காசாக்குவதிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகுந்த அக்கறை காட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. பொதுத்துறை நிறுவனம் லாபமீட்டுகிறதோ இல்லையோ, விற்பனை செய்வதாக முடிவெடுத்தால் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பாரத் எர்த் மூவர் லிமிடெட் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கியபோதும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டன.

 

கடந்த 2021, ஆகஸ்ட்  மாதத்தில் நடைபெற்ற தேசிய பணமாக்கல் செயல்முறை (NMP) கூட்டத்தில், அடுத்த நான்காண்டு காலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை சொத்துக்களான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள் மற்றும் துறைமுகங்களை தனியாருக்கு நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

 

அதன்படி பொதுத்துறை சொத்துக்களான விமான நிலையங்கள் பலவற்றையும் அதானி குழுமத்துக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விடும் பணி முடுக்கி விடப்பட்டது. துறைமுகங்களையும் அதானி குழுமம் குத்தகைக்கு வாங்கியது. நீண்டகாலக் குத்தகைக்கு வாங்குவது என்பதே விற்கப்படுவதற்கு சமமெனக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம், ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பு 2022-23 ஆண்டில், இதுவரை 33,422 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத்துறை சொத்துக்களைக் காசாக்கியுள்ளது. இதில், நிலக்கரி அமைச்சகத்தின் சுரங்கங்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டுமே 17,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அடுத்ததாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகங்கள் விற்பனைக்கு நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளன. இப்படி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்குமாக விற்றுக்கொண்டே சென்றால் பாராளுமன்றம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.