ADVERTISEMENT

தொலைந்து போன செல்போனை மீண்டும் கண்டுபிடிக்க எளிமையான புதிய வழி...

10:12 AM Jul 08, 2019 | kirubahar@nakk…

ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஆசையாக வாங்கிய செல்போன் தொலைந்துபோனால் அதனை கண்டறிவதும், திரும்ப பெறுவதும் இன்றளவிலும் அரிதான விஷயமாகவே உள்ளது. இதனை மாற்றும் விதமாக மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்க புதிய முறையை கண்டறிய கடந்த 2017 ஆம் ஆண்டு 'சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமேட்டிக்ஸ்' அமைப்பிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இது செயல்வடிவம் பெற்று தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன்மூலம் செல்போன்களில் இருந்து சிம் கார்டை எடுத்தாலும், ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினாலும் கூட, அவற்றை கண்டுபிடித்துவிட முடியும். இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதற்கென ‘சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிடி ரெஜிஸ்ட்ரர்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் புகார்கள் பதியப்பட்டு, போன்கள் முடக்கப்பட்டு கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT