ADVERTISEMENT

விதிகளைப் பின்பற்றாத பிரபலங்கள்; தோனி முதலிடம்

05:02 PM May 18, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏசிஎஸ்ஐ எனப்படும் Advertising Standards Council of India எனும் விளம்பர தரநிலை கவுன்சில் எனும் அமைப்பு விளம்பர தரநிலைகளைப் பின்பற்றாத பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி முன்னிலையில் உள்ளார்.

கடந்த ஆண்டில் 55 விளம்பரங்கள் மீது புகார் வந்துள்ள நிலையில் தற்போது அது 503 விளம்பரங்களாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி விளம்பரங்களில் பிரபலங்களை நடிக்க வைத்து கவனத்தை ஈர்க்க வழிவகை உண்டு. ஆனால் ஏசிஎஸ்ஐ அமைப்பினால் செயலாக்கப்பட்ட 97% வழக்குகளில் (பிரபலங்கள் நடித்த) விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் உண்மைத்தன்மை, பொருட்களின் தரம், வசனங்கள் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். அதில் விளம்பர நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த பட்டியலில் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட விளம்பரங்களில் நடித்து விதிகளை பின்பற்றாதவர்களின் பட்டியலில் 10 விளம்பரங்களில் நடித்து தோனி முதலிடத்திலும் 7 விளம்பரங்களில் நடித்து பிரபல யூடியூபர் புவம் பம் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஏசிஎஸ்ஐ ஆய்வின்படி விளையாட்டு, பாரம்பரிய கல்வி, உடல்நலம் மற்றும் தனிநபர் நலன் போன்ற நிறுவனங்கள் விதிமீறல்கள் மற்றும் பிரச்சனைகளை உடைய கருத்தாக்கங்களோடு முன்னிலையில் உள்ளது. இது குறித்து ஏசிஎஸ்ஐ கூறுகையில், “இந்த பிரச்சனை இணையத்தில் நுகர்வோரின் பாதுகாப்பு குறித்த தீவிர கவலைகளை எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளது.

ஏசிஎஸ்ஐ எனும் அமைப்பு சுதந்திரமான, தன்னார்வ சுய ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்த அமைப்பு இந்தியாவில் விளம்பரங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை பராமரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் விளம்பரங்கள் உண்மைத்தன்மையையும் நேர்மையையும் ஏசிஎஸ்ஐ குறியீடு கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT