Skip to main content

திண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்!!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

Thindivanam

 

திண்டிவனம் அருகே கோயில் அர்ச்சகர்களாக பணியாற்றிய சகோதரர்கள் இருவர், ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வடக்கு மாட வீதியை சேர்ந்த செல்லப்பன் (78) மற்றும் அவரது அண்ணன் சுவாமிநாதன் (86), இருவரும் திண்டிவனம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள அரசரடி விநாயகர் கோவிலில் அர்ச்சகராக பூஜை செய்து வந்துள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக சகோதரர்கள் இருவருக்கும் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் செல்லப்பன் நேற்று முன்தினம் 3:30 அளவில் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது அண்ணன் சாமிநாதனிடம் அவரது உறவினர்கள் தெரிவித்துவிட்டு, செல்லப்பன் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் சாமிநாதன் நேற்று முன்தினம் அதிகாலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் அண்ணன் தம்பி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

நேற்று முன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் இருவரது உடல்களும் திண்டிவனம் சலாவதி ரோட்டில் உள்ள நகராட்சி மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது அண்ணன், தம்பி இருவரும் வயது மூப்பின் காரணமாக இருந்திருந்தாலும்கூட இருவரும் ஒரே நாளில் இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றுலா வந்தவர்களின் கார் பயங்கர விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tourists' car tragic accident; 3 people lost their lives

விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியத்தில் மோதியதோடு எதிர்ப்புறம் சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சோக நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் தன்னுடைய நண்பர் கீர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆந்திராவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொளசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரை விஜயகுமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த விஜயகுமார் பலத்த காயமடைந்தார். மணீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கீர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்த காரில் பயணித்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்தி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.