VOTE COUNTING CHIEF ELECTION OFFICER DISCUSSION

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Advertisment

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஐந்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தி வருகிறார். காணொளி மூலம் நடைபெற்று வரும் ஆலோசனையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பங்கேற்றுள்ளார்.