ADVERTISEMENT

பாஜக தந்திரம் இனி நாட்டில் பலிக்காது -சந்திரபாபு நாயுடு

11:49 AM Jun 02, 2018 | vasanthbalakrishnan

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் ஆந்திரா மீதான மத்திய அரசின் பாரபட்சம் பற்றி அவ்வப்போது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்துவந்துள்ளார். அப்படியிருக்க நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் நடந்த ஒரு விழாவில் பேசிய அவர் தனக்கு நாட்டின் பிரதம மந்திரியாக ஆர்வம் இல்லை ஒரு சிப்பாய் போன்று நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் அதுவே என் ஆசை என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

"நான் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது என்பது நல்ல ஆட்சியைதான், எல்லா தலைவர்களும் தங்கள் மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும், மம்தா பானர்ஜி, கே. சந்திரசேகர் ராவ் அல்லது வேறு யாரையாவது நான் ஒரு சிப்பாயாக இருந்து கூட்டணி அரசாங்கங்களில் நான் முக்கிய பங்கைக் கொண்டிருப்பேன், ஆனால் பிரதமர் ஆக எனக்கு ஆர்வம் இல்லை. " என்றார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான தாக்குதலையும் தொடுத்தார் .கர்நாடகாவில் அனைத்து சட்டவிரோதமான வழிகளிலும், எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கு முயற்சி செய்தும், பிரதமர் மோடியின் தந்திரம் கர்நாடகாவில் பாலிக்கவில்லை, கர்நாடகாவில் பாஜக தோல்வி என்பது மக்களது உணர்வின் பிரதிபலிப்பாகும். இந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை, அதேபோல் மாநிலத்தின் சில கட்சிகளுடன் இணைந்து, சதி அரசியல்களில் ஈடுபட்டுள்ளது". அரசியலுக்கு எதிராக சதித்திட்டம் நடத்தி வருபவர்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

"நாங்கள் மத்திய அரசை நம்பியிருக்க மாட்டோம், அதே நேரத்தில் எமது உரிமைகளை விட்டுகொடுக்கமாட்டோம் .மத்திய அரசு எங்கள் உரிமைகளை மறுத்துள்ளது, 2019 ல் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாஜக ஆட்சிக்கு வரமுடியாது, ஊழல் குற்றச்சாட்டுகளில் மாநிலத்தில் கணிசமான வீழ்ச்சியைக் கண்டிருப்பதாகக் கூறிக் கொண்டு, "இந்த நான்கு ஆண்டுகளில் ஊழலை உயர்த்தி பிடித்துள்ளது பாஜக. ஆனால் பல மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, ​​ஆந்திராவில் ஊழல் மிகக் குறைவு என்றும் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT