ADVERTISEMENT

உடைந்த ஏரி... தண்ணீரில் மிதக்கும் வீடுகள்!

03:38 PM Nov 25, 2019 | suthakar@nakkh…

பெங்களூரில் சமீப நாட்களாகப் பெய்து வரும் கனமழைக் காரணமாக, மாவட்டத்தைச் சுற்றி இருக்கும் ஏரிகள் நிரம்பி வருகிறது. பெங்களூரில் ஹூலிமாவூ பகுதியில் ஹுலிமாவூ ஏரி உள்ளது. சமீப நாட்களாகப் பெய்த மழையால் ஹுலிமாவ் ஏரி நிரம்பிக் காணப்பட்டது. இந்த ஏரியைச் சுற்றிக் குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று இந்த ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி உள்ளது. ஏரிக்கரை உடைந்ததால், ஏரியிலிருந்த மொத்த நீரும் வெளியேறிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.


ADVERTISEMENT


இதனால், ஹுலிமாவூ பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநகராட்சி பணியாளர்களும் சேர்ந்து, அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகள் முழுவதும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இதுவரை உயிர்ச் சேதம் பதிவாகவில்லை. வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து காணப்படுவதால், அதிகாரிகள் அப்பகுதி மக்களை மீட்டு அரசுப் பள்ளி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT