ADVERTISEMENT

பெங்களூரில் கொண்டாட்டங்களுக்கு தடை!

09:38 PM Mar 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது.

இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தத் தடை விதித்தது. மேலும் விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் ஹிஜாப் அணிய தடைவிதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பிக்க இருக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜெ.எம்.காஷி, கிருஷ்ணா தீட்சித் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

இந்த வழக்கில் நாளை இடைக்கால உத்தரவை விதிப்பதை முன்னிட்டு பெங்களூருவில் நாளை முதல் மார்ச் 21ஆம் தேதி வரை போராட்டம், கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக பெங்களூர் காவல்துறை அறிவித்துள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாடவும், போராட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT