ADVERTISEMENT

திவாலாகும் நிலையில் ஏர் இந்தியா?? - சம்பள பாக்கிக்கே100 கோடி கடன்!!

12:36 PM Jun 08, 2018 | vasanthbalakrishnan

ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பல்வேறு செலவுகளை கவனிக்க 1000 கோடி கடன் வழங்குமாறு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல வருடங்களாக நஷ்டத்திலேயே இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த பங்குகளை வாங்க எந்த ஒரு நிறுவனமும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஏர் இந்தியாவின் ஊழியர்கள், விமானிகள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் அன்றாட செலவுகளுக்கு கூட சிரமத்தில் இருப்பதால் நிறுவனம் தானாக முன் வந்து வங்கிகளிடமும் நிதி நிறுவனங்களிடமும் 1000 கோடி கடன் கேட்டிருக்கிறது. அதற்கு ஈடாக மத்திய அரசிடம் ஈட்டு உறுதி பத்திரம் வாங்கி தரப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT