ADVERTISEMENT

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்

09:50 PM Oct 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

அதாவது இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் புகார் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் இறக்குமதி செய்யும் நிலக்கரி நேரடியாக இந்தியாவிற்கு வந்து சேரும் நிலையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 4 நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் 130 டாலருக்கு வாங்கப்படும் ஒரு டன் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது இடைத்தரகர்கள் மூலம் 169 டாலராக விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT