ADVERTISEMENT

திறந்தவெளியில் மலம் கழிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பினால் வரிச் சலுகை...

12:07 PM Nov 30, 2019 | kirubahar@nakk…

பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் திட்டமாக, யாரவது பொதுவெளியில் மலம் கழிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பினால் வரிச்சலுகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா கிராம நிர்வாகம் ஒன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜரண்டி என்ற கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு குடும்ப ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பவர்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும் என்றும் கிராம பஞ்சாயத்து சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் உள்ள நிலையிலும், மக்கள் திறந்தவெளியையே பயன்படுத்தி வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பிடிபட்டால் கூட அக்குடும்பத்தின் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என அக்கிராமத்தில் விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT