மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பயன்பாட்டில் இல்லாத பழைய ரயில் பெட்டி ஒன்று உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த ரயில் பெட்டி உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிநவீன அனைத்து வசதிகளுடன் கூடிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இந்த புதுவித முயற்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றால், மேலும் பல மாவட்டங்களில் இதுபோன்ற உணவகங்கள் திறக்கப்படும் என நாக்பூர் ரயில்வே டிவிசன் தெரிவித்துள்ளது.

Advertisment

ரயில் பெட்டி உணவகத்தின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே இணையமைச்சர் தர்சனா ஜர்டோஸ், ரயில் உணவகத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படங்களை மறக்காமல் பகிருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment