ADVERTISEMENT

தீவிரமடையும் கொரோனா; இந்தியாவில் ஒரே நாளில் 38 பேர் பலி

10:21 AM Apr 19, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.

இதனிடையே தடுப்பூசி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்தது இந்திய அரசு. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பதிப்பு 10,542 உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 61,233லிருந்து 63,562 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 38 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT