
நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கடந்த 22/3/2023 அன்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் சில தினங்களாக கரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (30/03/2023)காலை நிலவரப்படி கடந்த 5 மாதங்களாக இல்லாத அளவாக இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 5,335 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-லிருந்து 25,587 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)