ADVERTISEMENT

பட்டப்பகலில் பெண் வெட்டிக் கொலை... தலையைத் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்! 

11:21 AM Sep 22, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் தங்கியிருந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், கடந்த 2010ஆம் ஆண்டு இ.பி.காலனியில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார், கோழி அருள், புறா மாடசாமி, நந்தவனபட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி உட்பட 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி மீது பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புறா மாடசாமி உட்பட 4 பேர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நிர்மலாதேவி நடந்து செல்லும் போது மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றிவளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதன்பின் நிர்மலாதேவி தலையை அந்த மர்ம நபர்கள் தூக்கிச் சென்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட நிர்மலாதேவியின் தலையை அந்த மர்ம நபர்கள், இ.பி.காலனியில் உள்ள பசுபதி பாண்டியனின் வீட்டில் அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் வீசியுள்ளனர்.

இதனைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிர்மலா தேவி கொலை செய்யப்பட்ட சம்பவமும், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் நிர்மலா தேவியின் தலையை வீசியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT