Clash between drunken youths in a private liquor bar

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில் நேற்று இரவு செல்போன் காணாமல் போன விவகாரத்தில் மூன்று இளைஞர்கள் தகாத வார்த்தையால் அங்கு வந்த அனைவரையும் சத்தம் போட்டபடி இருந்துள்ளனர்.

Advertisment

இதனை அங்கு வந்த மற்றொரு வாலிபர் தட்டி கேட்டுள்ளார் இதனை அடுத்து அந்த மூன்று இளைஞர்களும் பயங்கர மது போதையில் தட்டிக் கேட்டவரை சரமாரியாக தாக்கி மண்ணில் போட்டு புரட்டி எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையே அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் போதை ஆசாமிகளின் மல்லுக்கட்டை கட்டுப்படுத்த முடியாமல் பரிதவிப்பதும் போலீஸ்காரர் முன்னிலையில் மேலும் அவர்கள் தாக்குவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த நிலையில் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தனியார் மதுபானம் கூடம் அருகே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா, மாயி, முகேஷ் ஆகிய மூன்று மீது வழக்கு பதிவு செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.