ADVERTISEMENT

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி (படங்கள்)

03:46 PM Feb 20, 2020 | rajavel

ADVERTISEMENT

பெங்களுரூவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் கேரள அரசு சொகுசு பஸ் இன்று அதிகாலை (வியாழச்க்கிழமை) 3 மணியளவில் அவிநாசி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது.

ADVERTISEMENT

இந்த பஸ்ஸில் 48 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். சொகுசு பஸ் என்பதால் பஸ்ஸில் வந்த அனைவருமே தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது எதிர் வழியில் சேலம் நோக்கி டைல்ஸ் ஏற்றிக்கொண்டு கண்டெயினர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

இந்த லாரி டிரைவர் திடீரென்று கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்டெயினர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் மையத் தடுப்பை தாண்டி கண் இமைக்கும் நேரத்தில், துளி கூட வேகம் குறையாமல் ரோட்டின் மறுபக்கம் பாய்ந்தது.


அப்போது என்னவென்று சுதாரிப்பதற்குள் கேரள அரசு சொகுசு பஸ்ஸும், கண்டெயினர் லாரியும் பலமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சொகுசு பஸ்ஸில் வந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே தூக்கத்திலேயே பலியாகினர்.


பஸ் மோதிய வேகத்தில் பலத்த சேதமடைந்தது. பஸ்ஸின் பாதி பகுதி உடைத்துக்கொண்டு போய் விட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கியதால் காயமடைந்திருப்பார்கள் என்று எண்ணிய நிலையில் மொத்தமாக 20 பேர் பலியாகி உள்ளனர்.

அவிநாசி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் போராடி பஸ் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


சம்பவ இடத்துக்கு திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். லாரி ஓட்டுனரின் கவனக்குறைவு 20 பேரின் உயிரை பறித்துள்ளது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தின் மீட்பு பணிகளில் கொத்து கொத்தாக சடலங்களை எடுத்து வந்த காட்சி நெஞ்சை பிழிவதாக இருந்தது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. பஸ்ஸில் வந்த அனைவருமே காயமடைந்து உள்ளனர்.

கோவை, திருப்பூர் மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்துக்கு காரணமாக இருந்த கண்டெயினர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லினார். கேரளா அமைச்சர்கள் சுனில்குமார், சசிதரன் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவினாசி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் விபரம்

1.கோபிகா
2.ஜிஸ்மன் சஜூ
3.மாஸிகா மணிகண்டன்
4.ஜோபி பால்ஸி
5.அணு
6.பைஜூ
7.ஐஸ்வர்யா
8.ராகேஷ்
9.எம்.சி.மேத்யூ
10.சிவக்குமார்
11.கிரீஸ்
12.ஸனூப்
13.இக்னில் ரஃபி
14.சிவசங்கர்
15.இக்னி ராஜ்
16.விஜயகுமார்
17.நசீர்
18.ஜேசுதாஸ்
19.ரோஸ்லி ஜானி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT