ADVERTISEMENT

பழனி ஐம்பொன் சிலை மோசடி வழக்கு!  சிபிசிஐடிக்கு மாற்றம்!!  பொண்மாணிக்கவேல் டீம் அதிர்ச்சி

08:34 PM Apr 02, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பழனி முருகன் திருக் கோயிலுக்கு ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி நடந்து இருப்பது தெரிந்ததின் பேரில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான டீம் கைது செய்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாசனத்தாலான தண்டாயுதபாணி (முருகன் ) சிலை தான் பழனி மலையில் உள்ள மூலஸ்தானத்தில் உள்ளது. அப்படிப்பட்ட நவப்பாசன முருகன் தான் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வருவதால் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து இந்த முருக பெருமானை தரிசித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் தான் போகரால் உருவாக்கப்பட்ட முருகனின் நவப்பாசன சிலை பழுதடைந்துள்ளதால் அதை மாற்றி அமைக்கவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் கடந்த 2004லில் முதல்வராக இருந்த ஜெவிடம் வலியுத்தினார். அதை தொடர்து தான் அப்பொழுது இருந்த கோவில் இ.ஓ. ராஜா மூலமாக கும்பகோணத்தை சேர்ந்த அரசு சிலை சிற்பியான ஸ்தபதி முத்தையாவிடம் பத்து கிலோ தங்கம் கொடுத்து ஐம்பொன்னால் 200 கிலோ அளவில் முருகனின் மூலவர் சிலை செய்ய சொல்லப்பட்டது . ஆனால் இஓ ராஜாவும், முத்தையாவும் விதி முறைப்படி ஐம்பொன் சிலை செய்யாமல் இருவரும் கூட்டு கொள்ளை அடிப்பதற்காக சிலையில் அதிமாக செம்பு கலந்ததுடன் மட்டுமல்லாமல் ஒரு துளி வெள்ளி கூட முலாம் பூசாமலேயே 21 கிலோ கூடுதலாக சேர்ந்து 221 கிலோ எடையில் ஐம்பொன் சிலை செய்து விட்டு சிலைக்கு பயன்படுத்த வேண்டிய 41/2கிலோ தங்கத்தை மோசடி செய்து இருவரும் பங்கு போட்டு கொண்டு இச்சிலையை ஜெ. அனுமதியின் பேரில் அப்போதை மூலவ நவப்பாசன சிலையை மறைத்து வைத்தனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்ததின் பேரில் அந்த ஐம்பொன் சிலையை அகற்றி ஸ்டோர் ரூமில் போட்டு விட்டனர்.


இந்த நிலையில் தான் அந்த ஐம்பொன் சிலையில் மோசடி நடந்து இருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யான பொன் மாணிக்கவேலுக்கு பல புகார்கள் வந்ததின் பேரில் கடந்த வாரம் சிலை செய்ததில் மோசடி செய்த ஸ்தபதி முத்தையாவையும், முன்னால் கோவில் இ.ஓ. ராஜாவையும் சிலை தடுப்பு காக்கிகள் கைது செய்தனர்.


அதை தொடர்ந்து தான் அந்த மொசடி சிலை செய்ததில் அப்பொழுது யார் யார் பணிபுரிந்தனர் அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிப்பதற்காக ஐ.ஜி. பொண்மாணிக்கவேல் தலைமையில் துணன கண்கானிப்பாளர் கருணாகரனுடன் இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் பழனிக்கு விசிட் அடித்து தற்பொழுது இ.ஓ. வாக இருக்கும் செல்வராஜ் மற்றும் மேனேஜர் உமாவை விசாரணைக்கு வரச்சொல்லி காலை முதல் மாலை வரை அதிரடி விசாரணை செய்தனர். அப்பொழுது 2004 முதல் தற்பொழுது வரை பணிபுரிந்து வரும் அதிகாரிகளின் லிஸ்டை கேட்டதின் பேரில் இ.ஓ.செல்வராசும் மேனேஜர் உமாவும் அந்த லிஸ்டை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து தான் சிலை தடுப்பு காக்கிகள் தொடந்து விசாரணையில் இருந்து வந்தனர். அதோடு இந்த மோசடியில் பலர் சிக்கப் போகிறார்கள்.

இப்படி சிலை மோசடியில் சிக்கி இருக்கும் அதோடு சிக்கப்போகும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை வாங்கி கொடுப்பேன் என தற்பொழுது கடைகளில் விற்பனையில் உள்ள 4ம்தேதி நமது நக்கீரனில் கூட வெளிப்படையாகவே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டி கொடுத்து இருந்ததை வெளியிட்டு இருக்கிறோம். இந்த நிலையில் தான் இபிஎஸ். ஒபிஎஸ் அரசு திடீரென இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து சிபிசிஐடி க்கு மாற்றிவிட்டது. இதை கண்டு பொண்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏற்கனவே பல வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கிடப்பில் தான் விசாரணை இருக்கிறது அது போல் ஐம்பொன் சிலை மோசடி வழக்கும் கிடப்பில் போடுவதற்காக மாற்றப்பட்டு இருக்கிறது. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு மாற்றி இருக்கலாம் என்ற பேச்சு பரபரப்பாக பேசப் பட்டும்வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT