ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியா வரை விரிந்த கருப்பு கொடியும் ... Go Back Modiயும்.. -அதிர்வில் பா.ஜ.க. தலைமை 

08:36 PM Feb 09, 2019 | jeevathangavel

ADVERTISEMENT


பிரதமர் நரேந்திர மோடி அரசு தமிழக முன்னேற்றத்திற்கு எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதோடு நீட் தேர்வு கொடுமை, கஜாபுயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்லாதது என தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையாக நடத்துவது என்பதோடு இந்திய அளவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை வேதனையுற வைத்தது.

ADVERTISEMENT

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாரி வழங்குவது என மத்திய பா.ஜ.க. மோடி அரசு மீது தமிழக அரசியல் கட்சிகள் மோடி எதிர்ப்பு போராட்டங்களை தமிழ் நாட்டில் கருப்பு கொடியுடனும் Go Back modi என்ற கோஷத்தோடும் தொடங்கியது. இந்த Go Back Modi உலக அளவில் வைரலாக பரவி முதன்மை இடத்தை பிடித்தது.

தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த கருப்புக்கொடி Go Back Modi போராட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பரவ தொடங்கி விட்டது. நேற்றும் இன்றும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அஸ்ஸாம் மாணவர் முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் பிரதமர் மோடிக்கு எதிராக Go Back modi என கருப்புக்கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினார்கள். குறிப்பாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் சென்ற போது மோடி கார் அருகிலேயே கருப்புக்கொடிகளை காட்ட பிரதமர் மோடி போராட்டம் நடத்தியவர்களையும் கருப்புக்கொடிகளையும் பார்த்து சற்றே மிரட்சியுடன் காரில் செல்கிறார். இதன் தொடர்ச்சியாக நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆந்திரா செல்லும் மோடிக்கு அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேச கட்சி மிக பிரமாண்டமாக கருப்புக்கொடியும் Go Back Modi போராட்டத்தையும் நடத்த தயாராகி வருகிறது.

நாளை காலை ஆந்திரா மாநிலம் விஜயவாடா விமான நிலையம் சென்று அங்கிருந்து தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு காரில் மோடி செல்கிறார். விஜயவாடா விமான நிலையம் முதல் நகர் முழுக்க சாலையோரங்களில் மிகப் பெரிய கருப்புக்கொடிகளும் Go Back modi என்ற பதாகைகளையும் பறக்க விட்டு வருகிறார்கள். ஆந்திராவை தொடர்ந்து மாலை தமிழ்நாட்டில் உள்ள திருப்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு திருப்பூரிலும் கருப்புக்கொடி எதிர்ப்பு மற்றும் Go Back Modi என்ற போராட்டத்தை பெரியாரிய உணர்வாளர்கள், தமிழ் அமைப்புகள் நடத்துகிறது.

இதனை தொடர்ந்து சில நாட்களில் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக மோடி செல்ல திட்டம் உள்ளது. சபரிமலை விவகாரத்தில் மத அடிப்படையில் மக்களிடம் கலகம் ஏற்படுத்திய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்..அமைப்புகளை கண்டிப்பதோடு இதற்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மோடியே கேரளாவுக்கு வராதே திரும்பிப் போ என்று கருப்புக்கொடி போராட்டத்திற்கு இடதுசாரி அமைப்புகள் தயாராகி வருகிறது. ஆக Go Back modi என்று கருப்புக்கொடி போராட்டம் என்ற நெருப்பை தமிழகம் பற்ற வைக்க இன்று இந்தியா முழுக்க தமிழகத்தின் நெருப்பு பொறி பறந்து பிரதமர் மோடிக்கெதிராக எதிர்ப்பலைகள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பற்றி பரவ தொடங்கி விட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT