ADVERTISEMENT

குழந்தை சுர்ஜித் மீட்புப்பணி... துரைமுருகன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ!

02:28 PM Oct 27, 2019 | vasanthbalakrishnan

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுர்ஜித் வில்சன் (2), நேற்று முன்தினம் மாலை 5.40 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த போது சுர்ஜித்தின் பெரியப்பா வேளாங்கண்ணியின் தோட்டத்தில் இருந்த பழைய ஆழ்குழாய் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தீயணைப்பு வீரர்கள், போலீசார் என தொடங்கி மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் மீட்பு முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தி தெரிந்த மக்கள் சுர்ஜித் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் பேசியிருப்பது...

ADVERTISEMENT


ADVERTISEMENT


"அந்த ஆழ்துளை கிணறு தோண்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அதை மூடாமல் இருந்தது மிகப்பெரிய குற்றம். அந்தக் கிணறால் பயனில்லை என்று தெரிந்துவிட்டபோதே மண் போட்டு மூடியிருக்க வேண்டும். அதற்கான பொறுப்பை காண்ட்ரேக்ட் எடுத்தவர் உள்ளிட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் இது குறித்த செய்திகளை பார்ப்பவர்கள் அனைவரும் குழந்தை மீட்கப்பட வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறோம். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டால் பெரிதும் மகிழ்வோம்".

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT