ADVERTISEMENT

யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக் கோரி மனு

12:53 PM Nov 25, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடிமைப் பணிக்கான தேர்வை மாநில மொழிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்விற்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் இது குறித்து தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. வேலைவாய்ப்பில் சம வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ளதுபோல் அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT