Skip to main content

சின் சானை நினைவு படுத்திய குட்டி ட்ரூடோ! 

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு ஏழுநாள் பயணமாக வந்தார். இந்தியா  வந்த அவருக்கு சரியான வரவேற்பு, கவனிப்புகள் இல்லையென்று கூறப்பட்டது. ஆனால் அவரோ நான் இங்கு கட்டிப்பிடிக்கவோ, சுற்றிப்பார்க்கவோ வரவில்லை என்று பேசி  தடாலடி கிளப்பினார். இப்படி ஒரு பக்கம்  பரபரப்பாக நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்க பயணத்தின் இறுதி கட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இப்பொழுதும் ட்ரூடோவின் பயணம் தோல்வி எனவும், சரியாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை எனவும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. ஒருபக்கம் சீரியஸாக இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதுதான் இன்னொரு பக்கம் ட்ரூடோ குடும்பம் விதவிதமான இந்திய உடைகளை அணிந்து இந்திய பயணத்தைக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளிவந்துகொண்டே  இருந்தன. அதில் மிகவும் ரசிக்கப்பட்டது ஜஸ்டின் ட்ரூடோவின் கடைசி மகனான ஹாட்ரீன் ட்ரூடோ செய்த குறும்புகள் தான். சுற்றி இருப்பவர்கள், நடக்கும் விஷயங்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவன் செய்த சேட்டைகள், பலருக்கும் 'சின்-சானை நினைவுபடுத்தின. அவன் செய்த சேட்டைகள் சில... 

hatrin trudeau

 

சபர்மதி ஆசிரமத்திற்கு ட்ரூடோ குடும்பம் சென்றது. அப்போது அங்கு கதர் இராட்டை  சுற்றிப்பார்த்தார்கள். இதன் ஒரு நிகழ்வாக காந்தி சிலையை பார்வையிட்டனர். அப்போது குட்டி ட்ரூடோ காந்தி சிலையின் அருகில் சென்று ஏதோ செய்கிறார். 

hartin trudeau

 

 

கோவிலில் அனைவரும் கடவுளை வணங்கிக்கொண்டிருக்க குட்டி ட்ரூடோ கீழே படுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். பின் நடனமாடிக்கொண்டிருக்கிறார். 

செங்கோட்டையில் பிரதமர் வரவேற்று பேசிக்கொண்டிருக்கும்போது குட்டி ட்ரூடோ எதையும் கண்டுகொள்ளாதவனாக  கீழே உட்கார்ந்துள்ளான். மழலைக்கு உலகமும் கிடையாது, எல்லையும் கிடையாது, தலைவனும் கிடையாது என நிரூபித்தது.

hatrin trudeau

மேலும் அங்கு அனைவரும் தங்கள் வருகையைப் பதிவிட்டுக்கொண்டிருக்க, இவரோ எனக்கென்ன என படுத்துவிட்டார்.

இதெல்லாம்தான் குட்டி ட்ரூடோவை மக்கள் விரும்ப காரணமாக அமைந்தது. அவன் நாட்டை விட்டு சென்றுவிட்டாலும் அவன் செய்த குறும்புகளை மக்கள் இன்னும் நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்