Skip to main content

ஸ்டாலின் பேச்சால் கடும் அப்செட்டில் எடப்பாடி! 

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் பெரும்பான் மைக்குத் தேவையான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியிருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கான ஆப்ரேசனை தி.மு.க. கையிலெடுத்திருப்பதாக கிடைத்திருக்கும் தகவல்களால் அப்-செட்டாகியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!. இடைத்தேர்தல் நடந்த 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் என்கிற திடமான நம்பிக்கையில் இருந்தார் மு.க.ஸ்டாலின். முழுமையான வெற்றியை தி.மு.க. கைப்பற்றினால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிடும் என தி.மு.க.வினர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த எதிர்க்கட்சியினரும் எதிர் பார்த்தனர். அ.தி.மு.க. தலைவர்களிடம் கூட, இடைத்தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் வந்து விடுமோ என்கிற அச்சம் இருக்கவே செய்தது. 
 

edapadi



அதற்கேற்ப நாடாளுமன்றத்துக்கு ஒரு தேர்தல் அறிக்கையையும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான ஒரு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக் கப்பட்ட சில உத்தரவாதங்கள் மக்க ளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், ஓவருக்கு 6 பந்துகளும் சிக்ஸர் அடித்தாக வேண்டும் என்பது போன்ற நெருக்கடியால் முழுமையான வெற்றியை தி.மு.க.வால் பெற முடியவில்லை.  இந்த நிலையில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கும் ஸ்டாலின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநாயகர் தனபால். அந்த நிகழ்வு முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், "சபாநாயகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட  நம்பிக்கையில்லா தீர்மானத் தில் உறுதியாக இருக்கிறீர்களா?' என கேட்கப்பட்ட கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்; ஜ்ஹண்ற் ஹய்க் ள்ங்ங் திரையில் காட்சிகள் வரும்' என பூடகமாகச் சொன்னார். மேலும், "ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா?' என கேள்வி எழுந்த போது, "சட்டமன்ற கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு முடிவை எடுப்போம்' என அழுத்தமாகச் சொன்னார் ஸ்டாலின். 
 

dmk



அரசுக்கு எதிரான கேள்விகளுக்கு பொடி வைத்து ஸ்டாலின் பதில் சொல்லியிருப்பதாக எடப்பாடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் பதிலில் மறைந்துள்ள விசயங்களை கண்டறியுமாறு உளவுத் துறையை கேட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டின் படி,அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  eps



தி.மு.க.வின் இந்த திட்டத்தை அறிந்து அப்-செட்டாகியிருக்கும் எடப்பாடி, அ.தி.மு.க.வை விட்டு விலகி ஒரு எம்.எல்.ஏ.கூட தி.மு.க.வின் திட்டத்திற்கு ஒத்துழைத்துவிடக் கூடாது என பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு எம்.எல். ஏ.விடமும் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். மந்திரி பதவி கேட்டு தன்னை நெருக்கிய எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்தியுள்ளார் எடப்பாடி. இதுகுறித்து அ.தி.மு.க. மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, எடப்பாடி மீது ஏகப்பட்ட அதிருப்தி இருந்தாலும் இந்த ஆட்சி 2021 வரை நீடிக்க வேண்டுமென்றுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நினைக்கின்றனர். பதவி பறிபோய் மீண்டும் இடைத் தேர்தல் வந்து அதில் தங்களுக்கே சீட் கிடைத்தாலும் மீண்டும் ஜெயிப்போமாங்கிறதுக்கு உத்தரவாதமில்லை. அதற்கு எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்?'' என்பதே எம்.எல்.ஏ.க்களின் எண்ணம். எடப்பாடியும் இதனை எம்.எல். ஏ.க்களிடம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.  மேலும் அமைச்சரவை மாற்றத்தை தவிர மற்ற எதிர்பார்ப்புகளை தடையின்றி நிறைவேற்ற உறுதி தந்திருக்கிறார் எடப்பாடி. அதனால், அ.தி.மு.க. ஆட்சி கவிழ எங்கள் எம். எல்.ஏ.க்கள் உடன்பட மாட்டார்கள். 


இதற்கிடையே, ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள எம்.எல்.ஏ.க்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்களே பாதுகாக்க வேண்டும் என்பது முந்தைய ஏற்பாடு. தற்போது எடப் பாடியோடு அமைச்சர்கள் பலரும் மல்லுக்கட்டுவதால் அந்த ஏற்பாட்டினை இனி தானே கையில் வைத்துக் கொள்ளவும் எடப்பாடி யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனால் எடப்பாடியிடமிருந்து எம்.எல்.ஏ.க் களைப் பிரிப்பது கடினம்தான் ‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள். எடப்பாடியின் தற்காப்பு நடவடிக்கையை செயல்படுத்த உளவுத்துறை உதவிகரமாக இருக்கிறது.