Skip to main content

மீண்டும் திரும்புகிறது 90ஸ் கிட்ஸின் பொற்காலம்... கிரிக்கெட் களத்தில் ஓய்வு பெற்ற வீரர்கள்...

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.

 

road safety world series in india

 

 

அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 முதல் 16 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் 2000 த்தின் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடிய, 90 ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான பல வீரர்கள் மீண்டும் விளையாட உள்ளனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியாவின் சச்சின், சேவாக், மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா, ஆஸ்திரேலிய அணியின் பிரெட் லீ, இலங்கை அணியின் தில்ஷன், தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாண்டி ரோட்ஸ் போன்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Road Safety World Series என்ற இந்த டி20 தொடரின் நடுவே வீரர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. 90கள் மற்றும் 2000 ஆவது ஆண்டுகளில் விளையாடிய வீரர்கள் மீண்டும் இந்தியாவில் டி20 தொடர் விளையாட உள்ளது பல 90ஸ் கிட்ஸ்களுக்கும் பழைய நினைவுகளை தூண்டுவதாக உள்ளதாக சமூகவலைத்தளங்களில் கருத்து எழுந்து வருகிறது.