Skip to main content

நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி! -மனதின் நூலகம் #2

Published on 08/07/2018 | Edited on 08/07/2018
manathin noolagam


 

Abbreviation என்பது பெரிய வாக்கியத்தின் சுருக்கம். பெரிய வாக்கியத்தை சுலபமாக நினைவில் வைத்துக் கொள் வதற்கான சுருக்கமான வழி இது. உதாரணமாக South  Asean Association for Regional Co-operation என்பது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு. இந்தப் பெரிய வாக்கியத்தை சுருக்கமாக SAARC என்று அழைக்கிறார்கள்.

 

 

 


சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம், பூட்டான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன. சார்க் அமைப்பில் எந்தெந்த நாடுகள் அடங்கியுள்ளன என்பதை சுலபமாக வைத்துக் கொள்வதற்கு பின் வரும் வழியைப் பின்பற்றலாம்.

 


India - I
Pakistan - P
Maldives - M
Bangladesh - B
Bhutan - B
Nepal - N
Sri lanka - S

 


மேற்கண்ட ஏழு நாடுகளின் முதல் எழுத்துக்களையும் வைத்து எளிதில் நினைவில் வைத்திருக்கும் ஒரு வார்த்தையை உருவாக்கலாம். PINMBBS  - பின்எம்பிபிஎஸ். பின்எம்பிபிஎஸ் என்ற வார்த்தையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும். அதில் வரக்கூடிய ஒவ்வொரு எழுத்தையும் வைத்து ஒவ்வொரு நாட்டையும் நினைவுக்குக் கொண்டு வந்து விடலாம். மொத்தத்தில் ஏழு நாடுகளையும் நினைவுக்குக் கொண்டு வந்து விடலாம்.

 


தொழிற்சாலைகளில் எந்திரங்களுக்கு திரி பேஸ் கரண்ட் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு பேஸ்சும் ஒவ்வொரு வயரில் வரும். எந்த பேஸ் எந்த வயரில் வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிமையான வழி. ஒவ்வொரு பேஸ்சும் ஒவ்வொரு நிற வயரில் கொடுக்கப் பட்டிருக்கும். சிவப்பு, மஞ்சள், நீல நிற வயர்களில் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

 

 

 


சிவப்பு R
மஞ்சள் Y
நீலம் B
முதல் பேஸ் சிவப்பு
இரண்டாவது பேஸ் மஞ்சள்
மூன்றாவது பேஸ் நீலம் என்று இருக்கிறது.

 

அதில் எந்த பேஸ் என்ன நிற வயர் என்று நினைவில் வைத்துக்கொள்ள RYB என்று சுருக்கமான ஒரு வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு வண்ணத்தைக் குறிக்கிறது. இரண்டாவது பேஸ் எந்த வயரில் இருக்கிறது என்று நினைவுக்குக் கொண்டு வர வேண்டுமானல், RYB ல் உள்ள இரண்டாவது எழுத்து Y. அதன்படி மஞ்சள் வயரில் இருக்கிறது என சுலபமாக நம்மால் நினைவு படுத்திக் கொள்ள முடியும்.

 


சாலைப் போக்குவரத்தில் பயன்படும் சிக்னல்களில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று விளக்குகள் உள்ளன. இவை எந்த வரிசையில் இருக்கின்றன. மேலே உள்ள விளக்கு எது, அடுத்து உள்ளது எது, கீழே உள்ளது எது என எளிதில் நினைவுக்குக் கொண்டு வர RYG  என்ற வார்த்தையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும்.
இதில் உள்ள வரிசைப்படி மேலே உள்ளது R - RED (சிவப்பு). அடுத்து உள்ளது Y - YELLOW (மஞ்சள்). கீழே உள்ளது G - GREEN (பச்சை) என சுலபமாக நம்மால் நினைவு படுத்திக் கொள்ள முடியும்.
வாக்கியங்களை நினைவில் வைத்திருக்க, இதுபோன்று எழுத்துக்களை இணைத்து வார்த்தையாக்குவது ஒரு வழிமுறை.

 

 

 


சில நேரங்களில் வெறும் எழுத்துக்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க வேண்டியது வரும். பொதுவாக வெறும் எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது கடினம். அந்த எழுத்துக்களை வைத்து ஏதேனும் அர்த்தமுடைய எளிதில் மறக்காத ஒரு வாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த எழுத்துக்களை நினைவு படுத்த வேண்டுமானல், அந்த வாக்கியத்தை நினைத்தால் போதும் எழுத்துக்கள் நினைவுக்கு வந்து விடும்.

 


உதாரணமாக மேற்கத்திய இசையில் E, G, B, D ஆகியவை இசைக்குறிப்புகள். இந்த எழுத்துக்களை நினைவில் வைத்திருக்க, இந்த வாக்கியத்தை சொல்வார்கள், “Every Good Boy Dose fine.” இந்த வாக்கியத்தை நினைவில் வைத்திருப்பது சுலபம். இந்த வாக்கியத்தில் இருந்து ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் ஒவ்வொரு முதல் எழுத்தையும் வைத்து, E, G, B, D ஆகிய இசைக்குறிப்பு எழுத்துக்களை நினைவுக்குக் கொண்டு வந்துவிடலாம். இதுபோன்று நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒவ்வொன்றுக்கும் சுலபமான வழி ஒன்றை நாமே கண்டறிந்து, அதன்படி நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
(இன்னும் வரும்)

முந்தைய பகுதி:
 

குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? மனதின் நூலகம்!!!