Skip to main content

பள்ளிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள்; தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
Court order to Tamil Nadu government on films relating to education in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கடந்த 2022-2023ஆம் கல்வியாண்டு வரை பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களைத் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியது. நடப்பு கல்வியாண்டில் இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. திரைப்படங்களைத் திரையிட அனுமதி வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (03-05-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், ‘நடப்பு 2024-2025ஆம் கல்வியாண்டில் அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களைத் திரையிடுவது குறித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்த வைத்தார்.   

சார்ந்த செய்திகள்