Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 11.12.2019

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய  பஞ்சாங்கம்

11-01-2019, மார்கழி 27, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 07.55 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கூடாரை வல்லி.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00    
 

mesham

                                                                                       மேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.

reshabam

                                                                                    ரிஷபம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.

3

                                                                                       மிதுனம்

இன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

kadagam

                கடகம்

 இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.                                                                      

 

5

                                                                                     சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும்.

kannirasi

                                                                                        கன்னி

இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

thulam

                                                                   துலாம்

 

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

viruchagam

                                                                                   விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.

danush

                                                                                          தனுசு

.

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

magaram

                                                                                        மகரம்

இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

kumbam

                                                                                       கும்பம்

 

இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.

meenam

                                                                                        மீனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் குறையும்.

 

 

சார்ந்த செய்திகள்