Skip to main content

இலங்கை கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கைது

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

Sri Lankan cricketer arrested in Australia

 

8 ஆவது உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து உடன் ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

இந்நிலையில் போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் வீரர் தனிஷ்கா குணத்திலகா ஆஸ்திரேலிய காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.  பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் தனுஷ்கா குணத்திலகாவை சிட்னி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

 

குணத்திலகா கைது செய்யப்பட்டுள்ளதால் நேற்று போட்டியில் தோற்ற இலங்கை அணி போட்டி முடிந்ததும் குணத்திலகாவை விட்டுவிட்டு தாயகம் திரும்பியது. 

 

நேற்று கைதான தனுஷ்கா குணத்திலகாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிட்னி காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்