Skip to main content

விண்டோஸ் 10-ல் இனி ஸ்டோரேஜ் பிரச்சனை இல்லை... வருகிறது அசத்தல் அப்டேட்ஸ்!!!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

windows 10

 

விண்டோஸ் 10-ல் ஸ்டோரேஜ் பிரச்சனையை சமாளிக்க புது அப்டேட்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதற்கு ஆர்கைவ் ஆப்ஸ் (Archive apps) என்று பெயரிட்டுள்ளது. அதாவது நீண்ட நாட்களாக பயன்படுத்தாத செயலிகளை கணினியானது தானே கண்டுபிடித்து மறைத்து வைக்கும். இதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் இழப்பு ஏதும் ஏற்படாது எனவும் அறிவித்துள்ளது.

 

இந்த வசதியானது தேவைபட்டால் நம் கணினியில் ஆன் செய்துகொள்ளவும், தேவை இல்லை எனும் பட்சத்தில் இதை நிறுத்தி வைத்துக்கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இதைச் சோதனை முறைக்கு உட்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10-ல் புது இயங்குதளத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் இந்த வசதியானது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்