Skip to main content

ரஷ்ய பொருளாதாரத்தில் கைவைத்த ஜோ பைடன்... அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு  

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

joe biden

 

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முற்றிலுமாக தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போரின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் செயலைக் கண்டித்துவரும் மேற்குலக நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளையும் விதித்துள்ளன. பொருளாதார ரீதியாக ரஷ்யாவிற்கு நெருக்கடி ஏற்படுத்த அதன் எரிவாயு ஏற்றுமதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மேற்குலக நாடுகளுக்கு சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

 

இதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து எரிவாயு இறக்குமதியை தடை செய்தால் பேரழிவை சந்திக்க நேரிடும் என உலக நாடுகளுக்கு ரஷ்ய துணை பிரதமர் அலெக்ஸாண்டர் நோவா எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முற்றிலுமாக தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அமெரிக்கா நாள் ஒன்றுக்கு 7லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தடையானது ரஷ்யாவிற்கு கணிசமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்