Skip to main content

'பேட்ட', 'விஸ்வாசம்' ரெண்டில் எது ஓடும்? 'நடிகர்' நாஞ்சில் சம்பத் பேட்டி!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
viswasam petta



அடுத்த எம்.ஜி.ஆரா சிம்பு? 'பேட்ட', 'விஸ்வாசம்', 'எல்.கே.ஜி.' பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியும், நடிகருமான நாஞ்சில் சம்பத். 
 

நீங்க நடிக்கும் 'எல்.கே.ஜி.' பொங்கலுக்கு வரவில்லையே?
 

'பேட்ட', 'விஸ்வாசம்' வருவதால் இப்போது வரவில்லை. இடைவெளிவிட்டு வெளியிடலாம் என நினைத்திருக்கிறார்கள். 
 

'பேட்ட', 'விஸ்வாசம்' படங்கள் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இரு படங்களின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதைப்பற்றி...
 

இளைய தலைமுறையைச் சார்ந்த தம்பிகளெல்லாம் அஜீத்தினுடைய ரசிகர்கள்தான். அஜீத்தை நம்பி எடுக்கப்பப்பட்ட படம். அஜீத்துக்காகவே எடுக்கப்பட்ட படம் 'விஸ்வாசம்'. 
 

ரஜினியின் 'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கென்று தமிழகத்தில் ஒரு செல்வாக்கு இருக்கிறது. இன்று வாலிபர்களை வசீகரித்திருக்கின்ற கதாநாயகர்களில் அவரும் ஒருவர். படம் தயாரிக்கிறார். அவருடைய களிறு போன்ற கண்களும், அவருடைய தத்ரூபவமான நடிப்பும், அவருக்கு ஒரு பெரிய வரவேற்பை தமிழகத்தில் தந்திருக்கிறது. அதுபோதாதென்று சுப்பிரமணியபுரம் சசிக்குமாரும் நடித்திருக்கிறார். அதனால் ரஜினிக்காக ஓடாவிட்டாலும், விஜய் சேதுபதி, சசிக்குமாருக்காக அந்தப் படம் ஓடும். இரண்டு படங்களுமே ஓடும். 

 

simbu seeman


 

எல்லோரிடத்திலும் கதை சொன்னேன். நடிக்க பயந்தார்கள். சிம்புதான் ''நான் நடிக்கிறேன்'' என்றார். அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர். என்றால், அண்ணனுக்கு (சீமான்) நீதான் என்றேன். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனி சிலம்பரசன்தான். சிம்புதான் ரியல் ஹீரோ என்று சமீபத்தில் மேடை ஒன்றில் பேசியிருக்கிறாரே சீமான்...

 

சிம்பு நல்ல நடிகர். நல்ல பண்பாளர். நடிகர் டி.ராஜேந்தரின் செல்வப் புதல்வன். சமீபத்தில் அவருடைய  செக்கச் சிவந்த வானம் பார்த்தேன். அதில் முத்திரை பதித்திருந்தார். அப்படி இயக்குநர் சீமான் என்ன கதை வைத்திருக்கிறார், என்ன கதை சொன்னார் என்று தெரியவில்லை. அதை துணிச்சலாக ஏற்றுக்கொண்ட சிம்புவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். அடுத்த எம்.ஜி.ஆர். என்று அவரை ஆராதிப்பதில் ஏதாவது அரசியல் இருக்குமா என்று தெரியவில்லை. படம் வந்த பிறகு பார்க்கலாம்.
 

Nanjil Sampath


 

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டதை எப்படி நினைக்கிறீர்கள்?
 

கஜா புயலை விட கொடூரமானது இந்த முடிவு. ஜனநாயக தேவதை ரத்தக்கொதிப்பில் இருக்கிறாள். பெரும்பாண்மை இல்லாத ஒரு அரசு ஆடுகிற தப்பாட்டத்தை யாருடைய ஆசியோடோ நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்