Skip to main content

ராணுவத்திற்கு ஒரு பொருளை விலைக்கு வாங்குவதில் ஒன்றும் ரகசியம் இல்லை: ஈ.வி.கே.எஸ் தாக்கு!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018


ராணுவத்திற்கு ஒரு பொருளை விலைக்கு வாங்குவதில் ஒன்றும் ரகசியம் இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பாஜக அரசு பெரும் மோசடி செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவனிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,

மத்திய பாஜக மோடி அரசு போர் விமானங்கள் வாங்கியதில் 41,000 கோடி கொள்ளை அடித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது 500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அதே போர் விமானத்தை இப்போது 1,600 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். அப்படியெனில் ஒரு போர் விமானத்துக்கு ரூ.1,100 கோடி கொள்ளையடித்துள்ளார்கள்.

அதேபோல், தமிழ்நாட்டில் குட்கா ஊழலில் நடவடிக்கை எதுவும் இருக்கபோவதில்லை காரணம் அந்த ஊழலை விசாரிப்பவர்களே பெருத்த ஊழல் பேர் வழிகள் தான். தமிழக சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை ஒன்றும் ஆச்சர்யமாக பார்க்க வேண்டியதில்லை. காரணம் வெகு விரைவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அந்த சிறைக்கு போகத்தான் போகிறார்கள். அவர்கள் சிறைக்கு போகும் முன்பே சிறையில் இப்போதே சொகுசு வசதிகளை செய்திருக்கிறார்கள்.

மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது என எதிர்கட்சிகள் கூறினால், அது ராணுவ ரகசியம் என்கிறார். ராணுவ ரகசியம் என்பது இந்திய ராணுவத்திடம் என்னென்ன ஆயுதங்கள் இருக்கிறது என்பதை சொல்லுவது தான். ராணுவத்திற்கு ஒரு பொருளை விலைக்கு வாங்குவதில் ஒன்றும் ரகசியம் இல்லை என்றார்.


 

சார்ந்த செய்திகள்