Skip to main content

மொட்டை அடித்து எலிக்கறி சாப்பிடும் போராட்டம்... 

Published on 21/10/2019 | Edited on 21/10/2019
Ayyakkannu



 


டெல்லி உச்ச நீதிமன்றம் சிறு குறு,  பெரிய விவசாயிகள் என்று பிரிக்காமல் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதை,  தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று  வலியுறுத்தியும்,  விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும்,  மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க வேண்டும்,  கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையை உடனடியாக  வழங்க வேண்டும்,  
 

ayyakkannu




காவிரி,  கொள்ளிடத்தில் தடுப்பு அணை கட்ட வேண்டும்,  காவிரியில் வெள்ளம் வரும்பொழுது தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது அதனை காவிரி - அய்யாறு,  காவிரி  - குண்டாறு வெள்ளநீர் கால்வாய் வெட்டி தண்ணீரை வறண்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாகண்ணு  தலைமையில் இன்று  21.10.2019 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகளின் உடையில் மொட்டை அடித்தல்,  எலிக்கறி சாப்பிடுதல்,  விவசாயிகளின்  மனைவியின் கழுத்தில்  உள்ள தாலியை அறுத்து விடாதீர்கள் என்று போராட்டம் நடத்தினர். 

 

 


 

 

 

 


 

சார்ந்த செய்திகள்