Skip to main content

தமிழகத்தில் இருந்து கொண்டு கர்நாடகா நலன் குறித்து சிந்திப்பதா? தமிழிசையை சாடிய ஜெயக்குமார்!

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
jayaku

 

 


காவிரி விவகாரம் குறித்து தமிழிசை செளந்தரராஜன் கூறிய கருத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தேர்தலுக்காக காவிரி விவகாரத்தை தள்ளிவைத்தோம் என்று கூறுவது தமிழக மக்கள் வேதனை படும் விஷயமாக இருக்கிறது. இது தவறான கருத்து நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழகத்தில் இருந்துகொண்டு தமிழக நலனை பார்க்காமல் கர்நாடக மாநில நலன் அடிப்படையில் தமிழிசை செளந்தரராஜன் கூறியதை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். தமிழகத்தை பொறுத்தவரை தமிழக மக்களின் உரிமை, விவசாயிகளின் உரிமையாக உள்ளது.

நடிகர்கள் கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்துக்கும் தமிழகத்தில் வரவேற்பு இல்லை. இதில் கமல்ஹாசன் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியே சொல்லமாட்டாராம். அது சிதம்பர ரகசியம். ரஜினிகாந்த் உறுப்பினர்களை அதிகமாக சேர்த்தால் தான் கட்சியை தொடங்குவாராம். இது இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் வரவேற்பு இல்லை என்பதை தான் தெளிவுப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்