Skip to main content

போட்டியிடாத கட்சிக்கு 2.9% வாக்குகள்! கருத்துக்கணிப்பு குழப்பங்கள்!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

தேர்தல் முடிவுக்கு பிறகு வந்த கருத்துக்கணிப்பால் விமர்சனங்களும்,சர்ச்சைகளும் எழுந்துள்ளன.பெரும்பாலான கருத்துக்கணிப்பில் பாஜக முன்னிலை பெரும் என்று கூறியுள்ளனர்.இந்த நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் தேஹ்ரி கார்வால், கார்வால், அல்மோரா தனி, நைனிடால் உதம்சிங் நகர், ஹரித்வார் என ஐந்து தொகுதிகள் உள்ளன. இங்கு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று ஊடகங்கள் வெளியிட்டன. 

 

exit poll



இந்த தொகுதிகளின் கருத்துக்கணிப்பில் பாஜக முன்னிலை பெரும் என்றும் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறியுள்ளனர்.இங்கு வெளியான கருத்துக்கணிப்பில் நிறைய குழப்பங்கள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் போட்டியிடவே இல்லை. அக்கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களில் தனித்தும், ஹரியானாவில் கூட்டணி வைத்தும் போட்டியிட்டது. 


வேறு எங்கும் அது போட்டியிடவில்லை. இந்த நிலையில் ஆம் ஆத்மிக்கு 2.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருப்பது இதன் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கியுள்ளது. டைம்ஸ் நவ் விஎம்ஆர் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சிக்கு சீட் எதுவும் கிடைக்காது என்றும் அக்கட்சிக்கு 2.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்