Skip to main content

'நரேந்திர மோடி' மைதானத்தில் 'ரிலையன்ஸ்'! - அதானி 'எண்ட்'...!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

MODI ADANI RELIANCE

 

குஜராத் மாநிலம் மோட்டேராவில் 800 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியோடு இணைந்து திறந்து வைத்த மைதானமே உலகின் மிகப்பெரிய மைதானமாகும். இந்த மைதானத்தில், ஒரு லட்சத்து இருபத்து நான்கு பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். முதலில் ‘சர்தார் வல்லபாய் படேல் மைதானம்’ எனப் பெயரிடப்பட்ட மைதானம், இன்று 'நரேந்திர மோடி மைதானம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு, ரிலையன்ஸ் முனை எனவும், அதானி முனை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியா - மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றவாது டெஸ்ட் போட்டி, 'நரேந்திர மோடி' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்கியபோது, மைதானத்தின் முனைகளுக்கு ரிலையன்ஸ் மற்றும் அதானி எனப் பெயரிடப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட ரசிகர்கள், அதுகுறித்து சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்